BREAKING NEWS
latest

Oman News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Oman News News, Articles, Oman News Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Monday, September 11, 2023

ஓமன் சுல்தான் மொராக்கோவிற்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டார்

ஓமனின் மனிதாபிமான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Image : ஒமான் சுல்தான்

ஓமன் சுல்தான் மொராக்கோவிற்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டார்

ஸ்கட்: மொராக்கோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக மீட்புக் குழுக்களை அனுப்பவும், அவசர உதவிகளை வழங்கவும் சுல்தான் ஹைதம் பின் தாரிக் ஞாயிற்றுக்கிழமை அரச ஆணை பிறப்பித்தார். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் ஓமனின் மனிதாபிமான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு மிக அருகில் உள்ள மராகேஷில் உள்ள வரலாற்று கட்டிடங்களும் நிலநடுக்கத்தில் சேதமடைந்தன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to Oman News

Tuesday, September 14, 2021

சோஹரில் இருந்து பயணிகள் பயன்பெறும் வகையில் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட்டன

ஓமானின் சோஹர் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் சர்வதேச விமானங்களின் சேவைகள் தொடங்கப்பட்டன

Image Credit: Air Arabia

சோஹரில் இருந்து பயணிகள் பயன்பெறும் வகையில் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட்டன

ஓமானில் உள்ள சோஹர்(Sohar) விமான நிலையத்தில் இருந்து கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சர்வதேச விமானங்களின் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. நேற்றைய தினம் ஏர் அரேபியா விமானம் இங்கிருந்து பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இங்கிருந்து விமான சேவைகள் இயக்கப்படும் எனவும், மேலும் வரும் நாட்களில் கூடுதல் சேவைகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஓமனில் தினசரி கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகின்ற நிலையில் கூடுதல் துறைகளுக்கு சலுகைகளை அனுமதிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Add your comments to Oman News

Tuesday, August 24, 2021

இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் செப்டம்பர் 1 முதல் ஓமானுக்குள் நுழையலாம்;விதிமுறைகள் பின்வருமாறு

இந்தியர்கள் உள்ளிட்ட தற்காலிகமாக பயணத்தடை விதிக்கப்பட்ட 18 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் செப்டம்பர்-1,2021 முதல் ஓமானுக்குள் நேரடியாக நுழையலாம்

Image : Beautiful Oman

இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் செப்டம்பர் 1 முதல் ஓமானுக்குள் நுழையலாம்;விதிமுறைகள் பின்வருமாறு

இந்தியா,பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் உட்பட 18 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாக ஓமானில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை ஓமான் நீக்கியதை அடுத்து வெளிநாட்டவர்கள் மீண்டும் நாட்டில் நுழைய முடியும். நேற்று(24/08/21) ஓமான் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் அறிக்கையின்படி, செப்டம்பர்-1,2021 உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வரும். ஓமான் குடிமக்கள், ஓமானில் வேலை செய்துவந்த வெளிநாட்டவர்கள், ஓமான் விசா வைத்திருப்பவர்கள், ஓமானுக்குள் நுழைவதற்கு விசா தேவையில்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள்மற்றும் ஓமானில் நுழைய On- Arrival பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று அனைத்து தரப்பினரும் கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க நாட்டிற்குள் நுழையலாம்.

அனைத்து பயணிகளும் ஓமனால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்திருக்க வேண்டும். அதுபோல் சில தடுப்பூசி ஒரு டோஸ் எடுத்தால் போதும் என்றவர்கள் அதை எடுத்தால் போதுமானதாகும். பயணிகள் வரும்போது QR-CODE உள்ள தடுப்பூசி சான்றிதழை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கடைசி டோஸ் தடுப்பூசி ஓமானுக்கு வரும் தேதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியல் ஓமன் சுகாதார அமைச்சகத்தால் விரைவில் வெளியிடப்படும். பயணத்திற்கு முன் எடுக்கப்பட்ட எதிர்மறை Rapid-Test பரிசோதனை சான்றிதழ் கைவசம் வைத்திருப்பவர்களுக்கு ஓமான் வந்தவுடன் தனிமைப்படுத்தல் தேவையில்லை இந்த பரிசோதனை முடிவிலும் QR-CODE இருக்க வேண்டும்.

அதேபோல் சர்வதேச விமானங்களில் Transit உட்பட எட்டு மணி நேரத்திற்கும் அதிகமான போக்குவரத்து பயண நேரத்துடன் வருபவர்கள், பயணத்தின் 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை எதிர்மறை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அதேநேரம் இந்தியா உள்ளிட்ட எட்டு மணி நேரத்திற்கும் குறைவான பயண தூரம் உள்ளவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை எதிர்மறை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். எதிர்மறை PCR பரிசோதனை முடிவு இல்லாமல் வரும் பயணிகள் ஓமான் வந்தவுடன் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் வரும் வரை மின்னணு கண்காணிப்பு சாதனத்தை அணிந்து(Tracking Device) தனிமைப்படுத்தல் செய்ய வேண்டும். தொடர்ந்து PCR பரிசோதனை முடிவு நேர்மறையாக இருந்தால், நோயாளி பரிசோதனை செய்யப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்கு Isolation-யில் இருக்க வேண்டும். அதுபோல் ஓமன் வந்தவுடன் நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் முடிவு நேர்மறையாக(Positive) இருந்தாலும், முன்பு நாட்டிற்கு வெளியே கோவிட் பாதிக்கப்பட்டு பின்னர் கோவிட் குணமடைந்தவராக இருந்தால் தனிமைப்படுத்தல் செய்ய வேண்டியதில்லை. ஆனால் கோவிட் உறுதிசெய்யப்பட்ட நேரத்தில், அந்த நாட்டில் தனிமைப்படுத்தல் செய்து அதை நிறைவடைந்ததற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

Oman Indians | Return Oman | September Oman

Add your comments to Oman News

Monday, August 23, 2021

இந்தியர்கள் செப்டம்பர் முதல் மீண்டும் ஓமானுக்கு திரும்ப அனுமதி வழங்கி புதிய அறிவிப்பு இன்று மாலையில் வெளியாகியுள்ளது

இந்தியா உள்ளிட்ட18 நாடுகளை சேர்ந்தவர்கள் செப்டம்பர்-1 முதல் நிபந்தனைகளுடன் ஓமானுக்கு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Image credit: Oman Air

இந்தியர்கள் செப்டம்பர் முதல் மீண்டும் ஓமானுக்கு திரும்ப அனுமதி வழங்கி புதிய அறிவிப்பு இன்று மாலையில் வெளியாகியுள்ளது

இந்தியர்கள் ஓமானுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அந்நாட்டின் சிவில் ஏவியேஷன் ஆணையம்(CAA) இன்று(23/08/21) திங்கள்கிழமை மாலையில் வெளியிட்ட அறிக்கையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் உட்பட சிவப்பு பட்டியலில் இருந்த18 நாடுகளில் இருந்து ஓமான் அங்கீகாரம் வழங்கியுள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி பூர்த்தி செய்து 14 நாட்கள் கடந்தவர்கள் நிபந்தனைகளை பின்பற்றி வருகின்ற செப்டம்பர்-1,2021 அன்று ஓமான் நேரப்படி 12:00 PM முதல் நாட்டிற்க்குள் நுழையலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இந்தியர்கள் வருகின்ற நேரத்தில் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை எதிர்மறை சான்றிதழ் எடுத்துவர வேண்டும்.

அதே நேரம் நீண்ட தூர பயணமாக 8 மணிநேரத்திற்கு மேலாக பயணம் செய்து Transit ஆக வருகின்ற நபர்களாக இருந்தால் 96 மணிநேரத்திற்குள் எடுத்த பிசிஆர் பரிசோதனை எதிர்மறை சான்றிதழ் எடுத்துவர வேண்டும். மேலும் On-Arrival விசா நபர்களும் இந்த தேதி முதல் நாட்டில் நுழைய முடியும். அதேபோல் இன்றைய அறிக்கையில் இனிமுதல் ஓமானுக்கு வருகின்ற 18-வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்கள் மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவு உள்ளிட்ட சான்றிதழ்கள் தேவையில்லை. இது தொடர்பான அறிவிப்பை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு வழங்கியுள்ளது எனவும், அதேபோல் உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கும் இதன் பலன் கிடைக்கும் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் பயணங்கள் தொடர்பான கூடுதல் நிபந்தனைகள் வரும் தினங்களில் அறிய முடியும். ஓமான் சுகாதரத்துறை அனுமதி வழங்கியுள்ள தடுப்பூசிகள் AstraZeneca / Covishield, AstraZeneca / Oxford, Pfizer / BioNTech, Sinovac, Sputnik V. ஆகியவை ஆகும்.

Add your comments to Oman News

Saturday, August 7, 2021

சோஹரில் இருந்து சலாலாவுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன

ஓமானின் சோஹரில் இருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று முதல் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன

Image credit:Salam Air

சோஹரில் இருந்து சலாலாவுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன

ஓமானின் சோஹர் விமான நிலையத்தில் இருந்து கோவிட் பரவல் காரணமாக கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஓமான் விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சலாம் ஏயர் விமானம் நேற்று(06/08/21) வெள்ளிக்கிழமை பயணிகளுடன் சலாலாவுக்கு புறப்பட்டது எனவும்,சோஹாரிலிருந்து சலாலாவிற்கு புதன்,வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் விமான சேவைகள்இருக்கும் எனவும் ஓமான் சிவில் விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Add your comments to Oman News

Wednesday, August 4, 2021

ஓமானில் விசா மாற்றத்திற்கான NOC விதிமுறைகள் பற்றி நாட்டின் துணைச் செயலாளர் நாசர் அமீர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்

ஓமானில் விசா மாற்றத்திற்கான NOC விதிமுறைகள் தொடர்பாக தொழிலாளர் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது

Image : Beautiful Oman

ஓமானில் விசா மாற்றத்திற்கான NOC விதிமுறைகள் பற்றி நாட்டின் துணைச் செயலாளர் நாசர் அமீர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்

ஓமானில் விசா மாற்றத்திற்கான என்ஓசி(NOC) விதிமுறைகள் தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு தொழிலாளர் துறை அமைச்சகம் தெளிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. நாட்டின் துணைச் செயலாளர் நாசர் அமீர் ஷுவைன் அல் ஹுசைனி அவர்கள் நாட்டின் அனைத்து Governorates-களிலும் உள்ள தொழிலாளர் துறை அமைச்சக இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வேலை மாற்றத்திற்காக விசா மாற்றுவது தொடர்பான என்ஓசி பற்றி தெளிவுபடுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுற்றறிக்கை கடந்த ஜூலை 29, 2021 அன்று வெளியிடப்பட்டது. புதிய சுற்றறிக்கையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஐந்து காரணங்களுக்காக முதலாளியின் அனுமதியின்றி புதிய விசாவிற்கு மாறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Add your comments to Oman News

Thursday, July 8, 2021

ஓமான் 23 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு நாட்டில் நுழைய தடை விதித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

ஓமான் இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு நாட்டில் நுழைய தடை விதித்து புதிய அறிவிப்பை இன்று மீண்டும் வெளியிட்டுள்ளது

Image credit: Oman Airlines

ஓமான் 23 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு நாட்டில் நுழைய தடை விதித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

ஓமானில் கோவிட் தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உலகெங்கிலும் உள்ள 23 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தங்கள் நாட்டில் நுழைய தடை விதித்து அறிவிப்பை இன்று மீண்டும் வெளியிட்டுள்ளது.ஜூலை 9 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் இது நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(08/07/21) வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட நாடுக‌ளின் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், துனிசியா, இங்கிலாந்து, புருனே, இந்தோனேசியா, எத்தியோப்பியா, ஈரான், அர்ஜென்டினா, பிரேசில், சூடான், ஈராக், பிலிப்பைன்ஸ், தான்சானியா, தென்னாப்பிரிக்கா, சியரா லியோன், கானா, கெனியா, கொலம்பியா, லிபியா மற்றும் நைஜீரியா ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.இதற்கிடையே லெபனான் ஓமானில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக Government Communication Center ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதில் இந்திய உள்ளிட்ட சில நாடுகளின் விமான சேவை தடையானது கடந்த ஏப்ரல் 24 முதல் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு அனுமதி உள்ளவர்கள் மற்றும் ஓமான் குடிமக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Add your comments to Oman News

Tuesday, July 6, 2021

ஓமானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன;பக்ரீத் தினங்களில் முழுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்

ஓமானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன;பக்ரீத் பண்டிகை தினங்களில் முழுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று உச்சக்குழு மாலையில் அறிக்கை வெளியிட்டுள்ளது

ஓமானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன;பக்ரீத் தினங்களில் முழுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்

ஓமானில் கோவிட் நோய்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்க உச்சக்குழு(Supreme Committee) இன்று(06/07/21) செவ்வாய்க்கிழமை மாலையில முடிவு செய்துள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 16 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 31 வரை இந்த கூடுதல் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. ஊரடங்கு மாலை 5 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இருக்கும். இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே நடமாட முற்றிலுமாக தடை விதிக்கப்படும், அதுபோல் அனைத்து வணிக,தொழில்துறை நிறுவனங்களை மூடவும் மற்றும் வாகனங்கள் சாலைகளில் இயக்கவும் இந்த நேரத்தில் தடை விதிக்கப்படும்.

மேலும் பக்ரீத் பண்டிகை தினமாக கருதப்படும் ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில்(துல் ஹஜ் 10 முதல் 12 வரை) முழுமையான ஊரடங்கு விதிக்கவும் உச்சக் குழு முடிவு செய்துள்ளது. இந்த நாட்களில் வணிக சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வாகன போக்குவரத்திற்கும் கட்டுப்பாடுகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் நாட்களில் மக்கள் ஒன்று சேருவதைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add your comments to Oman News

Monday, July 5, 2021

ஓமானில் தாயகம் திரும்புவதற்காக போலியான பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் தயாரித்த 2 வெளிநாட்டவர்கள் கைதாகியுள்ளனர்

ஓமானில் தாயகம் திரும்புவதற்காக போலியான பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் தயாரித்த 2 வெளிநாட்டவர்கள் கைது செய்துள்ளதாக ராயல் ஓமான் போலிஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது

Image credit: Oman Airlines

ஓமானில் தாயகம் திரும்புவதற்காக போலியான பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் தயாரித்த 2 வெளிநாட்டவர்கள் கைதாகியுள்ளனர்

ஓமானில் இருந்து தாயம் திரும்புவதற்காக போலியான பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ்களை தயார் செய்து மோசடி செய்த குற்றத்திற்காக இரண்டு வெளிநாட்டவர்களை ராயல் ஓமான் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.சி.ஆர் பரிசோதனை முடிவு என்பது தற்போதைய கொரோனா சூழ்நிலையில் ஓமானில் இருந்து வெளியேறுவதற்கு தேவையான ஆவணங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில் மஸ்கட் கவர்னரேட் போலீஸ் கமாண்டோக்கள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு இயக்குநரகம் ஜெனரலுடன் இணைந்து இந்த 2 நபர்களையும் கைது செய்ததாக ராயல் ஓமான் போலிஸ் பிரிவு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் போலி பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ்களை ஒரு டிராவல் ஏஜென்சி மூலம் தயார் செய்ததாக தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது கூடுதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராயல் ஓமான் போலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.

Add your comments to Oman News

Saturday, July 3, 2021

ஓமானில் கோவிட் பரவுவது தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், அனைவரும் சரியான விழிப்புணர்வை உறுதிப்படுத்த வேண்டும்.

ஓமானில் உள்ள வெளிநாட்டவர்களின் கவனத்திற்கு,கோவிட் பரவுவது நாட்டில் தொடர்ந்து தீவிரமாக இருப்பதால் மக்கள் பாதுகாப்பான இருக்க வேண்டிய நேரம் இதுவாகும்

Image Credit: Oman Police

ஓமானில் கோவிட் பரவுவது தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், அனைவரும் சரியான விழிப்புணர்வை உறுதிப்படுத்த வேண்டும்.

  1. ஓமானில் கோவிட் பரவுவது தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், அனைவரும் சரியான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 
  2.  பொது இடங்கள், வேலை செய்யும் இடங்கள் மற்றும் தங்கும் பகுதிகளில் முககவசம்  முறையாக அணிந்து சமூக இடைவெளியை உறுதி செய்யுங்கள். 
  3. உங்கள் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். 
  4. முடிந்தால் பாதுகாப்பு கையுறைகள் அணிய வேண்டும்.
  5. கோவிட் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஓமான் உச்ச குழு, சுகாதார அமைச்சகம் மற்றும் நகராட்சிகள் அறிவித்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள். 
  6. எந்த காரணத்திற்காகவும் பகுதிநேர ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். ராயல் ஓமான் காவல்துறையின் தலைமையில் அனைத்து Governorates-லும் கடுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  7. எந்த வகையிலும் விதிமுறைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு பெரும் தொகை அபராதம் விதிக்கப்படும், சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிகிறது எனவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.


Add your comments to Oman News

Sunday, June 27, 2021

ஓமானில் கொரோனாவுக்கு தாய் மற்றும் இரட்டை குழந்தைகள் பலி

ஓமானில் தாய் மற்றும் பிறந்த இரட்டை பச்சிளம் குழந்தைகளும் கொரோனா காரணமாக உயிரிழந்தது

Image : பதிவுக்காக மட்டும

ஓமானில் கொரோனாவுக்கு தாய் மற்றும் இரட்டை குழந்தைகள் பலி

ஓமானில் இளம் பெண்ணும் அவரது இரண்டு பிறந்த பச்சிளம் குழந்தைகளும் கோவிட் வைரஸின் பாதிப்புக்கு ஆளான நிலையில் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது. ஹசன் அல்-ஹாஷ்மி என்பவரின் மனைவி ஐடா(வயது-39) மற்றும் அவர்களது இரட்டையர்களான ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்று 3 பேரும் உயிரிழந்தனர்.

சுகாதரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவிட் மூலம் பாதிக்கப்பட்ட தாயின் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் பிரசவத்தின்போது மரணம் ஏற்பட்டது எனவும், கோவிட் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து தனது குழந்தைகளுக்கு வைரஸை பரவியது எனவும் தெரிவித்துள்ளனர். இந்த துயரமான நிகழ்வை தொடர்ந்து நாட்டில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கணவர் சுகாதார அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

Add your comments to Oman News

Saturday, June 19, 2021

ஓமானில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது

ஓமானில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு விதித்து ஓமான் உச்சக் குழு சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது

Image : Oman Police

ஓமானில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது

ஓமானில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இரவுநேர பயண தடை(பகுதிநேர ஊரடங்கு) விதித்து இன்று(19/06/21)சற்றுமுன் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. நாளை ஜூன்-20(ஞாயிற்றுக்கிழமை) முதல் புதிய உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. இந்த தடை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று "ஓமான் உச்சக் குழு " தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்சக் குழு வெளியிட்டுள்ள செய்தியில், ஓமானில் தொடர்ந்து உயரும் கோவிட் பரவலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், புதிய உத்தரவு நாளை தொடங்கி மற்றோரு அறிவிப்பு வெளியாகும் வரையில் ஊரடங்கு உத்தரவு இரவு 8:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரையில் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் ஓமான் உச்ச குழு அறிவுத்தல் செய்துள்ளது.

இந்த நேரத்தில் வர்த்தக தடையும் நடைமுறையில் இருக்கும், எனவே உணவுகள் Home Delivery மட்டுமே செய்யப்படும். மேலும் முந்தைய இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளில் சலுகைகள் வழங்கப்பட்ட பிரிவினருக்கு அதே சலுகைகள் இந்த ஊரடங்கு காலத்திலும் வழங்கபடும்.

Add your comments to Oman News

Friday, June 11, 2021

ஓமானில் தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் மீண்டும் பிரார்த்தனைக்காக நாளை முதல் திறக்கப்படுகின்றன

ஓமானில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் மீண்டும் பிரார்த்தனைக்காக நாளை முதல் திறக்கப்படுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது

Image: மஸ்கட் சிவன் கோயில்

ஓமானில் தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் மீண்டும் பிரார்த்தனைக்காக நாளை முதல் திறக்கப்படுகின்றன

ஓமானில் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் பின்பற்றி கிறிஸ்தவ தேவாலயங்களும், கோயில்களும் மீண்டும் திறக்கப்படுகின்றன. கோவிட் பரவல் அதிகரித்த நிலையில் கடந்த ஏப்ரல்-3,2021 முதல் தற்காலிகமாக பிரார்த்தனைக்காக மூடப்பட்டிருந்த கோவில்கள் மற்றும் தேவாலயங்களே விசுவாசிகள் பிரார்த்தனை செய்வதற்காக மீண்டும் திறக்கப்படுகின்றன. டர்செட்டில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோயில் மற்றும் மஸ்கட்டில் உள்ள ஸ்ரீ சிவன் கோயில் ஆகியவை ஜூன்-12 நாளை சனிக்கிழமையன்று வழிபாட்டுக்காக திறக்கப்படும்.

பூஜை சனிக்கிழமை காலை 06:30 மணிக்கு தர்சைட் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் தொடங்கும், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மஸ்கட்டில் உள்ள சிவன் கோவிலில் பூஜைகள் தொடங்கும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன்-13 ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமானில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பிரார்த்தனை தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதுபோல் 12-வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 65-வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கும் தேவாலயங்களில் நுழைவு அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட பல கடுமையான நிபந்தனைகளுடன் ருவி பீட்டர் மற்றும் பால் சர்ச் தேவாலயங்கள் வழிபாட்டிற்காக தயாராகி வருகின்றன என்று விசுவாசிகளுக்காக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேவாலயங்களுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகமூடி அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Add your comments to Oman News

Friday, June 4, 2021

ஓமானில் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் சிகிச்சையில் இருந்த நிலையி்ல் உயிரிழந்தார்

ஓமானில் இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கொரோனா காரணமாக சிகிச்சையில் இருந்த நிலையி்ல் உயிரிழந்தார்

Image : மரணமடைந்த பிரின்ஸ்

ஓமானில் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் சிகிச்சையில் இருந்த நிலையி்ல் உயிரிழந்தார்

ஓமானில் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கோவிட் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.இந்தியா,தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இமானுவேல் பிரின்ஸ்(வயது-41) தலைநகர் மஸ்கட்டில் வைத்து சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார்.

உயிரிழந்த பிரின்ஸ் பல ஆண்டுகளாக குப்ரா ஹயாட் மருத்துவமனையில் ஐடி துறையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் பேபி ராஜகுமாரி எனவும், இவர்களுக்கு ஃபெலின் மற்றும் டானா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளது.

Add your comments to Oman News

Wednesday, June 2, 2021

இந்தியாவில் இருந்து ஓமானுக்கான பயண தடை மீண்டும் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது

இந்தியாவில் இருந்து ஓமானுக்கான பயண தடை மீண்டும் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

Image: Beautiful Oman

இந்தியாவில் இருந்து ஓமானுக்கான பயண தடை மீண்டும் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது

இந்தியாவில் இருந்து ஓமானுக்கான பயணத் தடையை சுப்ரீம் கமிட்டி(உச்சக்குழு) நீட்டித்துள்ளது. மேலும் மற்றொரு அறிவிப்பு வரும் வரையில் இந்த புதிய தடை உத்தரவு காலவரையின்றி அமலில் இருக்கும். இந்தியாவைத் தவிர, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான நுழைவுத் தடைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் இந்த தடை 14 நாட்களுக்குள் இந்தியா வழியாக பயணம் செய்தவர்களுக்கும் பொருந்தும். இந்த புதிய தடை ஊத்தரவு ஜூன்-5,2021 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் அமலுக்கு வருகின்றது.ஏற்கெனவே தடை அமலில் உள்ள நிலையில் இந்த நீட்டிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவு இன்று(02/06/21) செவ்வாய்க்கிழமை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Add your comments to Oman News

Tuesday, May 25, 2021

ஓமானில் வெறுக்கத்தக்க பதிவுகளை வெளியிட்ட இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்

ஓமானில் வெறுக்கத்தக்க பதிவுகளை வெளியிட்ட இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது

ஓமானில் வெறுக்கத்தக்க பதிவுகளை வெளியிட்ட இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்

ஓமானில் தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் வெறுப்பு பதிவுகளை வெளியிட்ட இந்திய ஆசிரியர் ஒருவர் வேலை இழந்துள்ளார். அந்நாட்டின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக சம்பந்தப்பட்ட நபர் வேலை செய்துவந்தார். சுதிர் குமார் சுக்லா என்ற அந்த நபரை ஓமன் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் பணிநீக்கம் செய்தனர்.

இது தொடர்பான வெளியாகியுள்ள செய்தியில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவாகவும்,இஸ்ரேல் ஆதரித்தும் அவர்பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டார் எனவும் இதற்கு மாணவர்களும், அங்குள்ள மற்றவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பரவலான எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும் அவர் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார். இதையடுத்து கல்லூரியில் மாணவர்கள் அவரது வகுப்பை புறக்கணித்தனர். இதையடுத்து ஆசிரியரை பல்கலைக்கழக அதிகாரிகள் பணிநீக்கம் செய்தனர்.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அவர் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டார் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்தார். ஆனாலும் எதிர்ப்பு தணியாத காரணத்தால் அவர் தனது ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டார். அவர் இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற வெறுக்கத்தக்க ட்வீட்களை வெளியிட்டிருந்தார் எனவும் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Add your comments to Oman News

Sunday, May 23, 2021

இந்தியாவிலிருந்து ஓமானுக்கு செல்லும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்

இந்தியாவில் இருந்து ஓமானுக்கு செல்லும் விமானங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தடை தொடரும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது

இந்தியாவிலிருந்து ஓமானுக்கு செல்லும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்

இந்தியாவில் இருந்து ஓமானுக்கு செல்லும் விமானங்களுக்கு கொரோனா பரவல் காரணமாக தொடர்பு தடை விதிப்பதாக சிவில் ஏவியேஷன் ஆணையம் (சிஏஏ) தெரிவித்துள்ளது. இதை அந்நாட்டு பத்திரிகைகள் தற்போது செய்தியாக வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உச்சக் குழு பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும், ஆனால் இந்தியாவில் நோய் பரவுவது மிக தீவிரமாக இருப்பதால் விரைவில் மீண்டும் சேவைகள தொடங்குவது சாத்தியமில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த தடை உத்தரவு ஓமனி குடிமக்கள், தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் தூதர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பங்களுக்கு பொருந்தாது. அதுபோல் இந்தியாவைத் தவிர, இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட 16 நாடுகளின் குடிமக்கள் ஓமானுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் செப்டம்பருக்குள் ஓமானில் கோவிட் மூலம் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த மே மாதத்தில் மட்டும் 60 சதவீத நோய் பாதிப்பு வழக்குகளின் எண்ணிகை குறைந்துள்ளன. இந்த போக்கு தொடர்ந்தால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாட்டில் கோவிட் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று ஓமான் செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.தற்போது,நாட்டில் சிகிச்சை இருந்து குணமடையும் நோயாளிகளின் விகிதம் 93 சதவீதமாக உள்ளது.

Add your comments to Oman News

ஓமானில் வேலை செய்துவந்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 13 % குறைந்துள்ளது

ஓமானில் வேலை செய்துவந்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 13 % குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது

Image : Oman

ஓமானில் வேலை செய்துவந்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 13 % குறைந்துள்ளது

ஓமானில் பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச்,2021 வரையிலான புள்ளிவிவரங்களின்படி. நாட்டில் உள்ள வெளிநாட்டினர் 13 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தரவுகளை ஓமான் தேசிய மக்கள் தொகை புள்ளிவிவர மையம் வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது.

மார்ச் மாத நிலவரப்படி, அரசுத் துறையில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 53,332 லிருந்து 40,898 ஆகக் குறைந்துள்ளது. தனியார் துறையில், இந்த எண்ணிக்கை 16,08,781 இலிருந்து 14,03,287 ஆகக் குறைந்தது. பொதுத்துறை மற்றும் தனியார் துறை புள்ளிவிவரங்கள் சேர்க்கப்பட்டபோது, வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 218,000 குறைந்துள்ளது. இது மொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கையில் 13 சதவீதமாகும்.

Add your comments to Oman News

Tuesday, May 18, 2021

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை பிறழ் கோவிட் திரிபு ஓமானை அடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை பிறழ் கோவிட் திரிபு ஓமானை அடைந்துள்ளதாக கண்டறியப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image: Oman

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை பிறழ் கோவிட் திரிபு ஓமானை அடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸின் மரபணு மாற்றம் ஏற்பட்ட இரட்டை பிறழ் கோவிட் திரிபு ஓமானை அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கள மருத்துவமனை(Field Hospital)இயக்குநர் டாக்டர்.நபீல் முகமது அல் லாவதி இதை தெரிவித்தார். இருப்பினும், இது குறித்து கவலைப்பட தேவையில்லை என்றார்.இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது எனவும்,அதன் பரவலைத் தடுப்பதற்கான ஒரே வழி நாம் பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுதான் என்றும், அவர் கூறியதாக ஓமான் டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

அதுபோல் ஓமானில் உள்ள கள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 50 வயதிற்குட்பட்டவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஓமான் டி.வி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கள மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க முடிந்த மொத்த திறனில் 80 சதவீதம் நிரம்பி விட்டதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஐ.சி.யுவில் வைரஸ் பாதிப்பு முலம் கவலைக்கிடமாக சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் குறைந்துள்ளது எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

Add your comments to Oman News

Monday, May 17, 2021

ஓமானிலிருந்து இந்தியாவுக்கு உதவிகளை கொண்டு செல்ல ஓமான் ஏர் இலவசமாக விமானத்தை இயக்குகிறது

ஓமானிலிருந்து இந்தியாவுக்கு உதவிகளை கொண்டு செல்ல ஓமான் ஏர் இலவச சேவையை இயக்குகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது

Image : Oman Air

ஓமானிலிருந்து இந்தியாவுக்கு உதவிகளை கொண்டு செல்ல ஓமான் ஏர் இலவசமாக விமானத்தை இயக்குகிறது

இந்தியாவில் கோவிட் வைரஸ் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில் ஓமான் அரசு விமான நிறுவனமான "ஓமான் ஏர்" இந்தியாவுக்கு உதவி பொருட்களை எடுத்துச்செல்ல இலவச சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு ஓமானில் இருந்து "கோவிட் கார்கோலிஃப்ட்ஸ்'அடங்கிய சேவைகள் நடத்துவார்கள். ஓமான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஓமான் ஏர் அவசர மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உட்பட 10 டன்களுக்கும் அதிகமான பொருட்களை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இலவசமாக எடுத்துச்சென்று வழங்கும்.

Add your comments to Oman News